2-வது நாளாக மழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை; முடங்கிய மக்கள்: கேரளாவுக்கும் அடுத்து மழை எச்சரிக்கை
மும்பையில் தொடர்ந்து 2-வது நாளாக பெய்துவரும் கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி வீட்டுக்குள்ளே இருக்கின்றனர்.
தொடர் மழை காரணமாக ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, பஸ் போக்குவரத்து முடங்கியுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வடமாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கடந்த வாரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளை மூழ்கடித்த மழை, நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் கொட்டத் தொடங்கியுள்ளது. .
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இருந்து பெய்துவரும் மழை இன்று காலையும் தொடர்ந்தது. இன்னும் அடுத்த 24 மணிநேரத்துக்கு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளான தானே, பால்கர், நவி மும்பை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மும்பையின் புறநகர் பகுதிகளில் 100 மிமீ மழையும், தானே, நவி மும்பை பகுதிகளில் 250 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு அலுவல்களுக்காகவும், பொருட்கள் வாங்கவும், பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்லும் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
சாலைகள், சுரங்கப்பாதைகள், தெருக்கள், தாழ்வான குடியுருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் எங்கும் வெளியே செல்லமுடியாமல் தவிக்கின்றனர்.
ரயில் இருப்புப்பாதைகளில் மழை தேங்கி இருப்பதால், மும்பை கல்யான் ரயில் நிலையம், சிஎஸ்டி ரயில் நிலையம், கார்ஜாத், காசராந்த் கோபலி ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், புனேயில் இருந்து மும்பை செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புறநகர் ரயில்கள் தவிர, நீண்ட தொலைவு செல்லும் துரந்தோ, கோனார்க் எக்ஸ்பிரஸ், அமிர்தசர் எக்ஸ்பிரஸ், தேவ்கிரி எக்ஸ்பிரஸ், ஆகிய ரயில்கள் நாசிக், ஆட்கான், கல்யான், சிஎஸ்டி ஆகிய ரயில் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
விமான நிலைய ஓடுபாதையிலும் மழைநீர் தேங்கியதைத் தொடர்ந்து இன்று காலையில் இருந்து இரு விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்படவில்லை, மேலும், 6-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு நகரங்களில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டு திருப்பிவிடப்பட்டன.
இதற்கிடையே பால்கர் மாவட்டத்தில் உள்ள விகாரம்காத் தாலுகாவில் வெள்ளநீரில் சிக்கிய 16 வயது சிறுவன் அடித்துச்செல்லப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய வானிலை மையம் வெளியிட்ட எச்சரிக்கையில், " இன்றைய நாள் முழுவதும் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை, காற்றுடன் பெய்ய வாய்ப்புள்ளது. கடற்கரைப்பகுதியில் 5 மீட்டர் உயரத்துக்கும் அதிகமாக அலை உருவாகலாம் என்பதால், மக்கள் கடற்கரைப் பகுதிக்குள் செல்ல வேண்டாம். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது
கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட்
இதற்கிடையே கேரள மாநிலத்திலும் வரும் 6-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 7-ம் தேதி முதல் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் 6-ம் தேதி கனமழை பெய்யும் என்றும், இடுக்கி, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 7-ம் தேதி கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
**********
இப்படித்தான் இருக்குமா பூமி? சந்திரயான்-2 முதல்முறையாக எடுத்து அனுப்பிய புகைப்படங்கள்: வெளியிட்டது இஸ்ரோ
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லாண்டர் பூமிக் கோளை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
நிலவின் தென் துருவத்தை இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்தது இல்லை. இதை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 எனும் விண்கலத்தை தயாரித்து கடந்த மாதம் 22-ம் தேதி மார்க்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
சந்திரயான்-2 விண்கலம் மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் அனைத்தும் நவீன தொழில் நுட்பங்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை. ரூ.374 கோடியில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3, ஐந்தாம் தலைமுறை ராக்கெட்டாகும். இதன் எடை 6 ஆயிரத்து 400 கிலோ. இதன் உயரம் மிகக் குறைவாக 43.43 மீட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியா செலுத்திய ராக்கெட்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது. மார்க்-3 ராக்கெட்டில் மொத்தம் 3 நிலைகள் உள்ளன. இதன் இறுதி நிலையான கிரையோஜெனிக் இன்ஜின் முழுவதும் நம் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை சந்திரயான் விண்கலம் 48 நாட்களில் சென்றடையும்..
சந்திரயான்-2 விண்கலத்தில் 3 பிரிவுகள் இருக்கின்றன. 2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டர் பகுதி, சந்திரனில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் எனும் பகுதி இது 1,471 கிலோ எடை கொண்டது, அதன்பின் நிலவின் தென்துருவத்தில் இறங்கி சுற்றிவரும் ரோவர் பிரக்யான் 27 கிலோ எடை கொண்டதாகும் என்பது கவனிக்கத்தக்கது.
திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலம் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நிலவைச் சென்றடையும். அதன்பின் செப்டம்பர் 7-ம் தேதி லேண்டர் கருவி விக்ரம் நிலவில் தரையிறங்கி ரோவர் கருவி பிரக்யான் ஆய்வு செய்யும்.
இந்நிலையில் சந்திரயான் விண்கலம் கடந்த 22-ம் தேதியில் இருந்து பூமியின் ஒவ்வொரு சுற்றுவட்டப்பாதைக்கும் உயர்த்தப்பட்டு 3-வது சுற்றுப்பாதைக்கு முடித்திருந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.42 மணிக்கு 4-வது சுற்றுப்பாதைக்கு விண்கலம் உயர்த்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. வரும் 6-ம் தேதி பிற்பகல் 2.30 மணிமுதல் 3.30 மணிக்குள் 5-வது சுற்றுவட்டப்பாதைக்கு சந்திரயான் விண்கலம் உயர்த்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதனிடையே, சந்திரயான் விண்கலத்தில் உள்ள விம்ரம்லேண்டரின் எல்ஐ4 எனும் கேமரா பூமியை துல்லியமாகப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், " சந்திரயான் விண்கலத்தில் உள்ள விக்ரம்லான்டர் கருவியில் இருக்கும் எல்ஐ4 எனும் துல்லியமான கேமரா மூலம் பூமியை பல்வேறு கோணங்களில், தொலைவுகளில் புகைப்படம் எடுத்து சந்திரயான்-2 அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்கள் நேற்று (சனிக்கிழமை) மாலை 5.28 மணி 5.29, 5.32, 5.34, ஆகிய நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் மேல் 2,450 கிமீ, 3200 கிமீ, 4,100 கிமீ, 4,700கிமீ, 5000 கிமீ ஆகிய பல்வேறு உயரங்களில் இருந்து இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*************
நிலவின் தென் துருவத்தை இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்தது இல்லை. இதை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 எனும் விண்கலத்தை தயாரித்து கடந்த மாதம் 22-ம் தேதி மார்க்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை சந்திரயான் விண்கலம் 48 நாட்களில் சென்றடையும்..
பூமியின் மேல் 2,450 கிமீ, 3200 கிமீ, 4,100 கிமீ, 4,700கிமீ, 5000 கிமீ ஆகிய பல்வேறு உயரங்களில் இருந்து இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
************* புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன்: நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந் தது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, ஆர்யா, இயக்குநர் ஷங்கர், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன்பு தெரிந்தது. அவர் கூறிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அதை வரவேற்கிறேன். இதுகுறித்து நான் பேசினால் பிரதமர் மோடிக்கு கேட்கும் என இங்கே சொன்னார்கள். ஆனால், சூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது.
மாணவர்கள் படும் கஷ்டங் களை சூர்யா கண் எதிரே பார்த்த வர். மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறார். இன்றைய இளைஞர்கள் தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
*************
வெளியானாதுஆடை:அமலாபாலினமுயற்சிக்கு கிடைத்த பலன:
அமலா பாலின் தீவிர முயற்சி மற்றும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாலை காட்சியிலிருந்து வெளியாகியுள்ளது 'ஆடை'
‘மேயாத மான்’ படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கியுள்ள படம் ‘ஆடை’. நாயகியை மையப்படுத்திய இந்தக் கதையில், பிரதான பாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார். வி.ஜே.ரம்யா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் இன்று (ஜுலை 19) வெளியாகவிருந்தது.
ஆனால், படத்துக்கு வாங்கப்பட்ட பைனான்ஸில் சிக்கல் ஏற்பட்டதால் திட்டமிட்டப்படி காலை வெளியாகவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் ஏமாற்றமடைந்தனர். நேற்றிரவு (ஜுலை 18) முதலே இந்தப் படத்தின் பைனான்ஸ் பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் மற்றும் பைனாஸியர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
களமிறங்கிய அமலா பால்
இந்தப் படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கியவுடனே, அமலா பாலின் சம்பளப் பேச்சுவார்த்தையைத் தான் முதலில் பேசினார்கள். இதனைத் தெரிந்து கொண்ட அமலா பால் தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கி தேவையில்லை, படத்தை வெளியிடலாம் என்று கூறிவிட்டார். அடுத்ததாக பைனான்ஸியர்களுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது. நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டவில்லை. இதனால் காலை காட்சி வெளியாகாமல் போனது.
நேரடிப் பேச்சுவார்த்தையில் அமலா பால்
காலையில் படம் வெளியாகவில்லை என்றவுடன் அமலா பால், நேரடியா ஜெமினி லேப் சென்றுள்ளார். அங்கு தான் தயாரிப்பாளர் - பைனாஸியர்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்பேச்சுவார்த்தையில் அமலா பால் கலந்து கொண்டு சுமுக முடிவு எட்டும்வரை உடனிருந்து முடித்திருக்கிறார். மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை முடிந்தவுடன் தான் ஜெமினி லேப்பிலிருந்து கிளம்பியுள்ளார்.
தற்போது பைனான்ஸ் பிரச்சினை அனைத்துமே தீர்க்கப்பட்டு, லேப் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் அனைத்து திரையரங்குகளுக்கும் க்யூப் கீ எனப்படும் பாஸ்வோர்டு அனுப்பும் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது. அமலா பாலின் இந்த முயற்சிக்கு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பைனான்சியர்கள் உள்ளிட்ட அனைவருமே பாராட்டு தெரிவித்துள்ளனர்
*******
'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதா:
தமிழ் மக்கள் முட்டாள்தனமாக நடந்து கொள்ளக்கூடியவர்கள் என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதா தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'பிக் பாஸ்' சீசன் 3. சனி மற்றும் ஞாயிறு மட்டும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். மீதமுள்ள நாட்களில் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு இடையேயான நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இதில் போட்டியாளராகக் கலந்துகொண்ட வனிதா விஜயகுமார், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். வீட்டுக்குள் இருக்கும் போதே அவருடைய செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உருவானது.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன் வனிதா 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு[ பேட்டியொன்று அளித்திருக்கிறார். அதில் 'வெளியேற்றப்பட்டவுடன் என்ன நினைத்தீர்கள்' என்ற கேள்விக்கு வனிதா விஜயகுமார் “என்னை நிகழ்ச்சியிலிருந்து நீக்கியது எனக்கு உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஏனெனில் நான் வலுவான ஒரு போட்டியாளர். மற்றவர்களின் முக பாவனைகளிலிருந்து அவர்களுக்கும் அதிர்ச்சிதான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நேயர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. தங்களை உண்மையாக வெளிப்படுத்தும் போட்டியாளர்களை விரும்புகிறார்களா அல்லது கேம் ஆடுபவர்களை விரும்புகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. இதை முதலில் அவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும். என்னை வெளியேற்ற முடிவெடுத்து (நான் எதிர்பார்த்தது போலவே) என் பெயர் வந்த போது நான் அதைப்பற்றி பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. ஆனால், என்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராக, அறிவிப்பு வருவதற்காகக் காத்திருந்த போது, நான் வெளியே வந்துவிடும் மனநிலையில் தான் இருந்தேன்..
நான் என் ஆளுமைக்கு எப்போதும் உண்மையாக இருக்கவே விரும்புவேன். அதாவது நேரடியாக, வெளிப்படையாக முகத்துக்கு நேராகப் பேசிவிடுவது. என்னை பிக் பாஸ் வீட்டுக்கு அழைத்த பிறகு நான் வேறு மாதிரி இருக்க முடியுமா என்ன? ஆனால் இந்த தமிழ் மக்கள் முட்டாள்தனமாக நடந்து கொள்ளக்கூடியவர்கள் தான்.
நான் தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன். நான் இந்த மாநிலத்தை நேசிக்கிறேன். ஆனால் இங்கு நேயர்களை எளிதில் திசை திருப்ப முடியும், சிலபல கண்ணீர்களுக்கு அவர்கள் வீழ்ந்து விடுகிறார்கள். மற்றவர்கள் மீது அளவுக்கு அதிகமாக இவர்கள் பரிதாப உணர்வு கொள்கின்றனர். இதே மனிதர்கள்தான் ஆன்லைனில் கள்ளத்தனமாக சினிமாக்களைப் பார்ப்பவர்களாகவும் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

லீக்கான 'பிகில்' பாடல்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் ஒரு பாடல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏஜிஎஸ் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் 'பிகில்' படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறது. பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். 'தெறி', 'மெர்சலு'க்குப் பின் அட்லீயுடன் விஜய்யின் மூன்றாவது படம் இது. அதே போல 'மெர்சல்', 'சர்காரு'க்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானுடன் விஜய்க்கு தொடர்ந்து மூன்றாவது படம் இது.
படத்தின் முதல் போஸ்டர் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியானது. முதன் முறையாக ரஹ்மான் இசையில் விஜய் பாடவுள்ளார் என்ற செய்தியும் சில நாட்கள் கழித்து வந்தது. தற்போது படத்தின் 'சிங்கப்பெண்ணே' என்ற பாடல் இணையத்தில் கள்ளத்தனமாக பதிவேற்றப்பட்டுள்ளது.
விவேக் எழுதியுள்ள வரிகள் பெண்களைப் போற்றுவதாக அமைந்துள்ளது. இந்தப் பாடலை ரஹ்மான் பாடியுள்ளார். தற்போது இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. #BigilLeaked #BigilSongLeaked #Singapennae உள்ளிட்ட ஹாஷ் டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.
பாடலின் இறுதி வடிவம் இதில்லை என்றாலும் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர். பாடல் லீக் குறித்து படக்குழு விசாரித்து வருவதாகத் தெரிகிறது.
No comments:
Post a Comment